உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உத்திரமேரூர் ஒன்றியக் குழு கூட்டம்

உத்திரமேரூர் ஒன்றியக் குழு கூட்டம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில், ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் நடந்தது.ஒன்றியக் குழு தலைவர் ஹேமலதா தலைமை தாங்கினார். ஒன்றியக் குழு துணைத் தலைவர் வசந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் பானுமதி முன்னிலை வகித்தனர்.அதில், உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, எடமச்சி, இளநகர், குண்ணவாக்கம், அழிசூர் உட்பட 21 கிராமங்களில் உள்ள, ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள, உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களுக்கு, மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.பாலேஸ்வரம், தளவாரம்பூண்டி, சோழனூர் ஆகிய கிராமங்களில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி கட்டடங்கள், சமுதாய கூடம் ஆகியவற்றுக்கு நிதி வழங்க ஒப்புதல் அளிக்கக்கோரியும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன.ஒன்றியக் குழு உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலக பணியாளர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ