உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோத்சவம் வரும் 11ல் துவக்கம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோத்சவம் வரும் 11ல் துவக்கம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும், வைகாசி மாதத்தில், வைகாசி பிரம்மோத்சவம், 10 நாட்கள் விமரிசையாக நடப்பது வழக்கம். அதன்படி, நடப்பாண்டிற்கான பிரம்மோத்சவம், வரும் 11ம் தேதி, அதிகாலை 4:20 மணிக்கு மேல், 6:00 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.இதில், தினமும், காலை, மாலையில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் மலர் அலங்காரத்தில் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளும் வரதராஜ பெருமாள் பல்வேறு முக்கிய வீதி வழியாக வீதியுலா செல்கிறார்.இதில், மூன்றாம் நாள் பிரபல உத்சவமான மே 13ம் தேதி கருடசேவை உற்சவமும், ஏழாம் நாள் உற்சவமான மே 17ம் தேதி தேரோட்டமும், மே 19ம் தேதி காலை அனந்தசரஸ் திருக்குளத்தில் தீர்த்தவாரியும் விமரிசையாக நடக்கிறது. 20ம் தேதி இரவு, வெட்டிவேர் சப்பரத்துடன் வைகாசி பிரம்மோத்சவம் நிறைவடைகிறது.

பிரம்மோத்சவம் விபரம்

நாள் காலை உற்சவம் மாலை உற்சவம்மே 11 கொடியேற்றம், தங்க சப்பரம் சிம்ம வாகனம்12 ஹம்ஸ வாகனம் சூர்ய பிரபை13 கருடசேவை ஹனுமந்த வாகனம்14 சேஷ வாகனம் சந்திர பிரபை15 தங்க பல்லக்கு யாளி வாகனம்16 தங்க சப்பரம் யானை வாகனம்17 தேரோட்டம் -------18 தொட்டி திருமஞ்சனம் குதிரை வாகனம்19 தீர்த்தவாரி புண்ணியகோடி விமானம்20 த்வாதச ஆராதனம் வெட்டிவேர் சப்பரம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !