வல்லக்கோட்டை முருகன் கோவில் கும்பாபிஷேக விழா ஆலோசனை கூட்டம்
ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், கடந்த 2008ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில், கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த, அறநிலைத்துறையினர் திட்டமிட்டனர்.அதன்படி, திருகோவில் நிதி மற்றும் உபயதாரர்கள் நிதி, 1.25 கோடி ரூபாய் மதிப்பில் கோவிலில் பல்வேறு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஜூன் மாதம் 7 ம் தேதி கும்பாபிஷேக விழா நடைப்பெற உள்ளது.17 ஆண்டுகளுக்கு பின் நடைப்பெற உள்ள கும்பாபிஷேக விழாவிற்கு 1 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. ஸ்ரீபெரும்புதுார் சப் - கலெக்டர் மிருனாளினி தலையில், பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.இதில் கோவிலுக்கு செல்லும் பாதைகளில் உள்ள அக்கிரமிப்புகளை அகற்றுவது, பல்வேறு பகுகளில் இருந்து அரசு பேருந்துகள் இயக்குதல், தடையில்லா மும்முனை மின்சாரம், மருத்துவ முகாம், சாலை, குடிநீர், கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும். தீயணைப்பு துறை, உணவு பாதுகாப்பு துறை மற்றும் சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து ஆலோசனை கூறப்பட்டது.இதில் ஸ்ரீபெரும்புதுார் டி.எஸ்.பி., கீர்த்திவாசன், கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார், ஒரகடம் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில் தேவராஜ் மற்றும் கோவில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.