மேலும் செய்திகள்
மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழப்பு
08-Mar-2025
காஞ்சிபுரம், வள்ளல் பச்சையப்பர் தமிழகத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களை நிறுவி அனைவரும் கல்வி கற்க வழி வகை செய்தார். மேலும், பச்சையப்பன் கல்வி அறக்கட்டளையின் பள்ளி, கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. வள்ளல் பச்சையப்பரின் 231வது நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.இதையொட்டி சின்ன காஞ்சிபுரம் பச்சையப்பன் கிளை இடைநிலை பள்ளி வளாகத்தில் உள்ள வள்ளல் பச்சையப்பர் மணி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள வள்ளல் பச்சையப்பரின் திருஉருவ சிலைக்கு, தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் தலைமையில், அனைத்து பணியாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லுாரியில், முதல்வர் முனைவர் கோமதி தலைமையில், பேராசிரியர்கள் மாணவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள், வள்ளல் பச்சையப்பர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
08-Mar-2025