உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரூ.7,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

ரூ.7,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

செய்யூர் ச லத்துார் ஒன்றியம்,தண்டரை கிராமத்தைச் சேர்ந்தவர் புகழேந்தி, 50. தன் நிலத்தை பட்டா பெயர் மாற்றம் செய்ய, ஆன்லைன் வாயிலாக விண்ணப்பம் செய்தார்.அந்த விண்ணப்பம், தண்டரை கிராம நிர்வாக அலுவலரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சுதாகர், 40, என்பவரிடம் புகழேந்திவிசாரித்தார்.அப்போது, பட்டா பெயர் மாற்றம் செய்ய, 7,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.புகழேந்தி, இதுகுறித்து சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.நேற்று காலை 11:30 மணிக்கு, ரசாயனம் தடவிய, 7,000 ரூபாயை, லஞ்ச ஒழிப்பு போலீசார் புகழேந்தியிடம் கொடுத்து அனுப்பினர்.லஞ்சப் பணத்தை கொடுப்பதற்காக, மொபைல் போன் வாயிலாக சுதாகரை தொடர்புகொண்டபோது, லத்துார் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு வந்துவிட்டதால், தன் நண்பர் பழனியிடம், 58, கொடுக்குமாறு கூறியுள்ளார்.பின், பழனியிடம் பணத்தை கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான 12 பேர், பழனியை கைது செய்தனர்.அவரிடம் விசாரித்த போது, சுதாகர் கூறியதன் அடிப்படையில் பணத்தை பெற்றதாக தெரிவித்தார். இதையடுத்து, லத்துார் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் இருந்த வி.ஏ.ஓ., சுதாகரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ