உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தாறுமாறாக செல்லும் வாகனங்கள் உத்தரமேரூரில் விபத்து அச்சம்

தாறுமாறாக செல்லும் வாகனங்கள் உத்தரமேரூரில் விபத்து அச்சம்

உத்திரமேரூர்: உத்திரமேரூரில், மும்முனை சாலை சந்திப்பு பகுதியில் தாறுமாறாக வாகனங்கள் செல்வதை தடுக்க, தடுப்புகள் அமைக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். உத்திரமேரூரில், அம்பேத்கர் சிலை எதிரே காஞ்சிபுரம் சாலை, புக்கத்துறை சாலை, மானாம்பதி சாலை ஆகிய மூன்று சாலைகள் சந்திக்கின்றன. இந்த மும்முனை சாலை சந்திப்பின் வழியே தினமும் 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வந்தவாசி ஆகிய பகுதிகளுக்கு செல்கின்றன. மூன்று ஆண்டுக்கு முன் இப்பகுதியில் சாலை விரிவுபடுத்தப்பட்டும், போக்குவரத்து நெரிசல் எப்போதும் அதிகமாகவே உள்ளது. இந்த மும்முனை சாலை சந்திப்பு பகுதியில் மையத் தடுப்புகள் இல்லாமல் உள்ளது. இதனால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன. வேகமாக செல்லும் வாகனங்களால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. மேலும், காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லுாரி மாணவர்களும் மும்முனை சந்திப்பு சாலையை கடக்க சிரமப்படுகின்றனர். எனவே, உத்திரமேரூரில் மும்முனை சாலை சந்திப்பு பகுதியில், வாகனங்கள் தாறுமாறாக செல்வதை தடுக்க தடுப்புகள் அமைக்க, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை