உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குன்றத்துார் பஸ் நிலையத்தை ஆக்கிரமிக்கும் வாகனங்கள்

குன்றத்துார் பஸ் நிலையத்தை ஆக்கிரமிக்கும் வாகனங்கள்

குன்றத்துார்:குன்றத்துார் பேருந்து நிலையத்தில் இருந்து, பல்வேறு பகுதிகளுக்கு, அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்து நிலையத்தின் உள்ளே தனியார் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.இதனால், இட நெருக்கடி ஏற்படுகிறது. குன்றத்துார் பேருந்து நிலையத்தின் உள்ளே சென்று திரும்பி வர, அரசு பேருந்து ஓட்டுநர்கள் சிரமடைகின்றனர்.பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் தனியார் வாகன ஓட்டிகள் மீது, காவல் துறை, நகராட்சி துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை