மேலும் செய்திகள்
மத்திய நிதியை செலவிடாமல் ஊராட்சிகள்.மெத்தனம்
26-Aug-2025
வெங்காடு:வெங்காடு ஊராட்சியில், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் வெங்கட்ராம அய்யர் குளம் சீரமைப்பு பணிக்கான பூமி பூஜை நடந்தது. ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், வெங்காடு ஊராட்சியில், வெங்கட்ராம ஐயர் குளம் உள்ளது. 50 ஆண்டு களுக்கு மேலாக இந்த குளத்து நீரை அப்பகுதி மக்கள் குடிநீரான பயன் படுத்தி வருகின்றனர். இந்த குளத்தை சுற்றி மதில் சுவர் அமைத்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், ஊராட்சி தலைவர் அன்னக்கிளி உலகநாதனிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, வெங்காட்டில் உள்ள 'கெஸ்டாம்ப்' என்ற கார் உதிரி பாகம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையின் சி.எஸ்.ஆர்., நிதி மூலம், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் குளம் சீரமைக்க திட்டமிட்டப் பட்டது. இதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. வெங்காடு ஊராட்சி தலைவர் அன்னக்கிளி உலகநாதன், ஜெர்மனியைச் சேர்ந்த தனியார் அறக்கட்டளை நிறுவனர் கரோலின் ஆகியோர் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தனர். தொழிற்சாலை இயக்குநர் பிரபாகர் ராம மூர்த்தி, செயல்பாட்டு தலைவர் நந்தகுமார், மனித வள மேலாளர் சரவணகுமார், வெங்காடு ஊராட்சி துணை தலைவர் தமிழ்செல்வி ரவிச் சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
26-Aug-2025