மண்புழு உரக்கூடம் சேதம்
காஞ்சிபுரம்:ஒழுக்கோல்பட்டில் அமைக்கப்பட்டுள்ள மண்புழு தயாரிக்கும் உரக்கூடம் சேதமடைந்துள்ளது. ஒழுக்கோல்பட்டு கிராம சுடுகாடு அருகே, இரண்டு லட்சம் ரூபாய் செலவில் மண்புழு தயாரிக்கும் உரக்கூடம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. வீடுகளில் சேகரிக்கப் படும் மட்கும் குப்பை மண்புழு உரமாக தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாத மழைக்கு மண்புழு உரக்கூட கட்டடத்தில் வேயப்பட்ட தென்னங்கீற்றுகள் சேதம் அடைந்தன. அதன் பின், ஊராட்சி நிர்வாகம் புதிய தென்னங்கீற்று வேயவில்லை. ஊராட்சி நிர்வாகம், ஒழுக்கோல்பட்டு கிராம மண்புழு உரக்கூடத்தை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.