உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கருக்கினில் அம்மனுக்கு விஷ்ணு துர்க்கை அலங்காரம்

கருக்கினில் அம்மனுக்கு விஷ்ணு துர்க்கை அலங்காரம்

காஞ்சிபுரம்:நவராத்திரி விழாவையொட்டி, காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கருக்கினில் அமர்ந்தவள் அம்மன், விஷ்ணு துர்க்கை அலங்காரத்தில் ஊஞ்சல் சேவை உத்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம் புதுப்பாளையம் தெரு தென்கோடியில், கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நவராத்திரி விழா, கடந்த 23ல் துவங்கியது. இதில், தினமும் மாலையில், கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் ஊஞ்சல் சேவை உத்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இதில், ஐந்தாம் நாள் உத்சவமான நேற்று மாலை, விஷ்ணு துர்க்கை அலங்காரத்தில் எழுந்தருளிய கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் ஊஞ்சல் சேவை உத்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை