மேலும் செய்திகள்
சாலையோர தடுப்புகள் சேதம் அச்சத்தில் பகுதிவாசிகள்
02-Mar-2025
உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம், விசூர் கிராமத்தில், வீரி அம்மன் கோவில் குளம் உள்ளது. இந்த குளம், அப்பகுதியின் பிரதான நிலத்தடி நீராதாரமாக உள்ளது.இக்குளத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் தவறி விழாதபடிக்கு, கடந்தாண்டு குளத்தை சுற்றி பாதியளவு மட்டுமே தடுப்புகள் அமைக்கப்பட்டன.குடியிருப்புகள் உள்ள திசையில் குளத்தை சுற்றி போதிய தடுப்புகள் இல்லாமல் உள்ளது. இதனால், அருகிலுள்ள குடியிருப்புகளில் உள்ள சிறுவர்கள், குளத்தின் அருகே விளையாடும்போது தவறி விழும் நிலை உள்ளது.குளத்தை சுற்றி முழுதுமாக தடுப்புகள் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
02-Mar-2025