வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி
உத்திரமேரூர்:உத்திரமேரூரில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணி, துணை தாசில்தார் அஞ்சலை தலைமையில் நேற்று நடந்தது. இந்த பேரணி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கி, உத்திரமேரூர் தாசில்தார் அலுவலகம் அருகே முடிந்தது.இதில் பங்கேற்ற பள்ளி மாணவியர், 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் பெறக்கூடாது என, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மக்களுக்கு வழங்கினர். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.