மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : உலக விலங்குகள் சிரிப்பு தினம்
04-Oct-2024
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தைகள் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள், போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.இத்தகைய இல்லங்கள், விடுதிகள் பதிவு செய்யப்பட்டு செயல்பட வேண்டும் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.அவ்வாறு பதிவு பெறாமல் மாவட்டத்தில் செயல்படும் இல்லங்கள், விடுதிகள் பதிவு செய்து கொள்ள, ஒரு மாதம் அவகாசம் வழங்கப்படுகிறது.பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து இல்லங்கள் மற்றும் விடுதிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 'சீல்' வைக்கப்படும் என, கலெக்டர் கலைச்செல்வி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
04-Oct-2024