மேலும் செய்திகள்
வேகவதி ஆற்றை ஆக்கிரமித்துள்ள செங்கல் சூளைகள்
10-Oct-2024
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள வீடுகளுக்கு பாலாறு, திருப்பாற்கடல் மற்றும் வேகவதி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை குழாய் வாயிலாக, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இதில், காஞ்சிபுரம் ஜவஹர்லால் நேரு சாலையில் நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு, ஒரு மாதமாக குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.இதனால், அப்பாராவ் தெரு, காமராஜர் நகர் உள்ளிட இப்பகுதியில் வசிப்பவர்களில் வீட்டு குழாய்களில் சரிவர குடிநீர் வருவதில்லை என, புகார் தெரிவிக்கின்றனர்.எனவே, ஜவஹர்லால் நேரு தெருவில், நிலத்தடியில் ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
10-Oct-2024