உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மின் மோட்டார் பழுதால் குடிநீர் தட்டுப்பாடு

மின் மோட்டார் பழுதால் குடிநீர் தட்டுப்பாடு

உத்திரமேரூர்:மல்லிகாபுரத்தில் மின் மோட்டார் பழுதடைந்ததால், அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உத்திரமேரூர் பேரூராட்சி, மல்லிகாபுரம் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்க, பேரூராட்சி நிர்வாகம் சிறு மின் விசை குழாய் அமைத்துள்ளது. இங்கு குடியிருப்போர், வீட்டு உபயோகத்திற்காக இந்த நீரை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், இந்த சிறு மின் விசை குழாய் குடிநீர் தொட்டியில் நீரேற்ற, பயன்படுத்தப்பட்டு வந்த மின் மோட்டார் பழுதடைந்து உள்ளது. மின் மோட்டார் பழுதடைந்து 15 நாட்கள் ஆகியும், அதை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், குடியிருப்போர், குடிநீருக்காக வேறொரு பகுதியில் உள்ள, சிறு மின் விசை குழாயை தேடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, பழுதடைந்துள்ள சிறு மின் விசை குழாய் மின் மோட்டாரை சீரமைக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, குடியிருப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ