பிரதான குழாயில் உடைப்பு வெங்கச்சேரியில் குடிநீர் வீண்
வெங்கச்சேரி:காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, வெங்கச்சேரி செய்யாற்றங்கரையில் ஆழ்துளை குழாய் அமைத்து, நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் வாயிலாக ஆற்பாக்கம் கிராமத்திற்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.இந்நிலையில், ஆற்பாக்கத்திற்கு செல்லும் பிரதான குழாயில், மாகரல் கிராமத்தில் இரு இடங்களிலும், வெங்கச்சேரி செய்யாற்று பாலம் வழியாக செல்லும் குழாயிலும் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக செல்கிறது.இதனால், ஆற்பாக்கத்திற்கு போதுமான குடிநீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, மாகரல், மற்றும் வெங்கச்சேரியில் ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.