உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த வெல்டர் பலி

மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த வெல்டர் பலி

ஸ்ரீபெரும்புதுார்:சீர்காழி அருகே, தாண்டவன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சூரியப்பன், 26; சென்னை, போரூரில் தங்கி வெல்டிங் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை, ஒரகடம் அருகே பண்ருட்டியில் உள்ள பி.எஸ்.பி., மருத்துவ கல்லுாரியின் மூன்றாவது மாடியில் வெல்டில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, நிலை தடுமாறி மாடியில் இருந்து விழுந்தார்.இதில் பலத்த காயமடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, அதே மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு, மருத்துவர்கள் பரிசோதித்ததில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஒரகடம் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி