சத்ய சாய்பாபா பிறந்த நாள் விழா 100 பேருக்கு நல உதவி வழங்கல்
காஞ்சிபுரம்: சத்ய சாய் பாபாவின் 100வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, நுாறு பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், பிரதான சமிதி சார்பில், ஆட்டுப்புத்துார் கிராமத்தில், சத்ய சாய் பாபாவின் 100வது பிறந்தநாள் விழா நேற்று நடந்தது. இந்த விழாவில், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள நுாறு பெண்களுக்கு, இலவச சேலைகளை ஆட்டுப்புத்துார் ஊராட்சி தலைவி சுபத்ராவின் கணவர் மோகன் நேற்று வழங்கினார். நிகழ்ச்சியில், சத்ய சாய் பிரதான சமிதி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.