மேலும் செய்திகள்
மழையால் சேதமான சாலை சீரமைப்பு பணி துவக்கம்
06-Dec-2024
உத்திரமேரூர், உத்திரமேரூரை சுற்றியுள்ள, 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள், மாதந்தோறும் பவுர்ணமி கிரிவலத்திற்கு திருவண்ணாமலைக்கு செல்கின்றனர். அவ்வாறு செல்லும்போது, உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் இருந்து வந்தவாசி, காஞ்சிபுரம் சென்று, அங்கிருந்து வேறொரு பேருந்து பிடித்து செல்ல வேண்டியுள்ளது.இதனால், பக்தர்களுக்கு நேரம் மற்றும் பணவிரயம் ஏற்படுகிறது. மேலும், சென்னையில் இருந்து உத்திரமேரூர் வழியாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகளில் போதிய இடம் இல்லாததால், பேருந்தின் படியில் நின்று பக்தர்கள் பயணம் செய்ய வேண்டிய சூழல் உள்ளது.இதை தவிர்க்க, உத்திரமேரூர் - திருவண்ணாமலைக்கு நேரடி அரசு பேருந்து சேவையை துவக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
06-Dec-2024