இரும்பு தடுப்புகளை சீரமைப்பது எப்போது?
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், கிளக்காடி கிராமத்தில், திருப்புலிவனம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை,சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.கிளக்காடி ஏரிக்கால்வாய் அருகே செல்லும் சாலையில் ஆபத்தான வளைவு உள்ளது. இங்கு, விபத்து ஏற்படுவதைத் தவிர்க்க, நெடுஞ்சாலைத் துறை வாயிலாக, சாலையோர இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.தற்போது, இரும்பு தடுப்புகள் சேதமடைந்து, சரிந்த நிலையில் உள்ளன. இதனால் வாகனங்கள்,சாலையோரத்தில் உள்ள 20 அடி பள்ளத்தில், விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.எனவே, ஆபத்தான சாலை வளைவில் சேதமடைந்த இரும்பு தடுப்புகளை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.