உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புதிதாக சமுதாய நலக்கூடம் வாலாஜாபாதில் அமையுமா?

புதிதாக சமுதாய நலக்கூடம் வாலாஜாபாதில் அமையுமா?

வாலாஜாபாத், வாலாஜாபாத் பேரூராட்சியில், 15 வார்டுகளில் 25,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். சுற்றிலும் 30க்கும்மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.வாலாஜாபாத் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏழை, எளிய மக்கள், தங்கள் குடும்ப நிகழ்ச்சிகள் நடத்த தனியார் மண்டபங்களில் பெருமளவு செலவு செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர்.வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே, சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சமுதாயக்கூடம், போதிய இடவசதி மற்றும் தேவையான வசதிகள் ஏற்படுத்தாமல் இருந்தது. இதனால், அக்கட்டடம் வணிக வளாகத்தோடுஇணைத்து பயன்பாட்டில் உள்ளது.மேலும், வாலாஜாபாத் பேரூராட்சி 4வது வார்டு, இந்திரா நகரில் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் பழுதடைந்து, 10 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாடின்றி உள்ளது.இதனால், வாலாஜாபாத் பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியினர், வாலாஜாபாதில் நவீன சமுதாயக்கூடம் அமைத்து தர வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.இதுகுறித்து வாலாஜாபாத் பேரூராட்சி நிர்வாகி கூறியதாவது:வாலாஜாபாதில் நவீன வசதிகளுடன் சமுதாயக்கூடம் ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இதற்காக, வாலாஜாபாத் பேரூராட்சி 8வது வார்டு, சாய்நகர் உள்ளிட்ட பகுதிகளில் இடம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. புதிய சமுதாய கூடத்திற்காக திட்ட மதிப்பீடு தயாரித்து, நிதி அளிக்க கோரி அரசு அனுமதிக்கான பரிசீலனையில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ