தார்ச்சாலையாக மாற்றப்படுமா தாங்கல் கரை சாலை
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், மருதம் கிராமத்தில், மேட்டு ஆதிதிராவிடர் குடியிருப்பு உள்ளது. இங்கு, 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் மருதம் தாங்கல் கரை மீது அமைந்துள்ள சாலையை பயன்படுத்தி, பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.தாங்கல் கரை சாலை மண் சாலையாக இருப்பதால், மழை நேரங்களில் சகதியாக மாறுகிறது. அந்த நேரத்தில், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.மேலும், இந்த சாலையில் விளை நிலங்களுக்கு உரங்கள், விளைபொருட்கள் எடுத்து செல்லும் விவசாயிகள், மழை நேரங்களில் நிலைத் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, தாங்கல் கரை மீது அமைந்துள்ள சாலையை, தார்ச்சாலையாக மாற்ற, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.