ஓரிக்கை பாலாறு பாலத்தில் மணல் குவியல் அகற்றப்படுமா?
ஓரிக்கை:காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, ஓரிக்கை பாலாற்றின் குறுக்கே உள்ள பாலம் வழியாக, தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பாலத்தின் வழியாக கட்டுமானப் பணிக்காக எம்-சாண்ட் மணல் ஏற்றிச் சென்ற லாரிகளில் இருந்து சிதறிய மணல், பாலத்தின் மீதுள்ள சாலையோரம் குவியலாக குவிந்துள்ளது.இதனால், பாலம் வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, மணல் குவியலில் சிக்கி நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, ஓரிக்கை பாலாறு பாலத்தின் சாலையில் உள்ள மணல் குவியலை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.