உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குட்கா விற்ற பெண் கைது

குட்கா விற்ற பெண் கைது

உத்திரமேரூர், உத்திரமேரூரில் குட்கா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட, எம்.ஜி.ஆர்., நகர், காஞ்சிபுரம் சாலை, புக்கத்துறை சாலை ஆகிய பகுதிகளில், உத்திரமேரூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள ராதா, 46; என்பவரின் பெட்டிக்கடையில் சந்தேகத்தின்படி, போலீசார் சோதனை செய்தனர். அப்போது, 1300 கிராம் குட்கா பொருள் சிக்கியது. அதை பறிமுதல் செய்த உத்திரமேரூர் போலீசார், பெட்டிக்கடை உரிமையாளரான ராதாவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை