மேலும் செய்திகள்
ஓட்டலில் விபசாரம்; ஒருவர் கைது
26-Dec-2024
ஸ்ரீபெரும்புதுார்:சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுாரில், ‛ஹெவன் கேட்' எனும் தனியார் மூன்று நட்சத்திர ஹோட்டல் உள்ளது.இங்கு, பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக, ஸ்ரீபெரும்புதுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்படி, நேற்று முன்தினம் இரவு, அந்த நட்சத்திர ஹோட்டலில், போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அதில், ஹோட்டலில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரிந்தது.இதையடுத்து, பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த சென்னையை சேர்ந்த காயத்திரி, 30, என்பவரை கைது செய்தனர்.பாலியல் தொழிலில் ஈடுபட்ட, 5 பெண்களை மீட்டு, சென்னையில் உள்ள மகளிர் கூர்நோக்கு இல்லத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
26-Dec-2024