உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஸ்கூட்டர் மீது கன்டெய்னர் மோதி பெண் பலி

ஸ்கூட்டர் மீது கன்டெய்னர் மோதி பெண் பலி

ஸ்ரீபெரும்புதுார்:திருமுல்லைவாயில் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் சுகந்தி, 43. நேற்று முன்தினம், 'ஆக்டிவா' ஸ்கூட்டரில், காஞ்சிபுரத்தில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு, ஸ்ரீபெரும்புதுார் வழியே வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தண்டலம் சந்திப்பு அருகே வந்த போது, கன்டெய்னர், திடீரென திருப்பிய போது, சுகந்தியின் ஸ்கூட்டர் மீது மோதியது.இதில் நிலைத்தடுமாறி சுகந்தி விழுந்ததில், தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, அவர் உயிரிழந்தார்.ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, கன்டெய்னர் ஓட்டுனரை பிடித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி