உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி

கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி

உத்திரமேரூர்:உத்திரமேரூர் அழிசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள், 41; கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில் அருகிலுள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில், நண்பர்களுடன் குளிப்பதற்காக இறங்கினார். அப்போது, அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.எதிர்பாராதவிதமாக கிணற்றில் மூழ்கியுள்ளார். அங்கிருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், நீரில் மூழ்கிய பெருமாளை, சடலமாக மீட்டனர். இது குறித்து, பெருநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !