உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

உத்திரமேரூர்:உத்திரமேரூர் தாலுகா, புலிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், 60, பந்தல் அமைக்கும் தொழிலாளி. இவர், குரும்பிறை கிராமத்தில் நடந்த சுப நிகழ்ச்சி ஒன்றுக்கு பந்தல் அமைத்து இருந்தார். நேற்று காலை வெங்கடேசன் பந்தல் பிரிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக பந்தல் கம்பி மேலே செல்லும் மின் கம்பியில் உரசியது. அப்போது, வெங்கடேசன் மின்சாரம் தாக்கி மயக்கமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, சாலவாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் இறந்து விட்டதாக கூறினார். சாலவாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை