உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், சின்ன ஐயங்குளம் பகுதியில், கட்டட கூலி தொழிலாளி மீது வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காஞ்சிபுரம், சதாவரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ், 35. இவர், கட்டட கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம், இரவு, 10:00 மணிக்கு, பணி முடிந்து, தன் வீட்டிற்கு, சின்ன ஐயங்குளம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நடந்து சென்றார். அப்போது, அவ்வழியே சென்ற மகேந்திரா பொலிரோ வாகனம், வேகமாக சென்று கணேஷ் மீது மோதியுள்ளது. இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காஞ்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை