பச்சையப்பன் ஆடவர் கல்லுாரியில் யோகா தின கொண்டாட்டம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரியில் யோகா தின கொண்டாட்டம் நேற்று நடந்தது.காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரியில் நேற்று நடந்த சர்வதேச யோகா தின கொண்டாட்டத்திற்கு கல்லுாரி முதல்வர் முனைவர் முருககூத்தன் தலைமை வகித்தார்.காஞ்சிபுரம் யோகா சிகிச்சை முறை பயிற்றுநர் சுபாஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களுக்கு பல்வேறு யோகா பயிற்சியையும், அதன் நன்மைகளையும் எடுத்து கூறினார்.இந்நிகழ்ச்சியில், கல்லுாரி ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் முனைவர் பழநிராஜ், முனைவர் அண்ணாதுரை, கல்லுாரி பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ -- மாணவியர் என, 200க்-கும் மேற்பட்டோர் யோகா பயிற்சியில் பங்கேற்றனர்.நிகழ்ச்சியை கல்லுாரி உடற்கல்வித் துறை பேராசிரியர் முனைவர் செந்தில் தங்கராஜ், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் ஹரிகிருஷ்ணன் முனைவர், பேராசிரியர் ரவீந்தர் மற்றும் பேராசிரியர் கௌரி சங்கர், என்.சி.சி., அசோசியேட் ஆபீஸ் முனைவர் ஆனந்தன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.