முழு நேர கூட்டுறவு மேலாண் பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண் பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, 2025- -- 26ம் நிதி ஆண்டின் முழு நேர கூட்டுறவு மேலாண் பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர்கள் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்கலாம். பத்தாம் வகுப்பு மற்றும் மூன்று ஆண்டு பட்டியப்படித்தவர்கள் ஜூலை- 1ம் தேதி அன்று 17 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.ஜூன் -20ம் தேதி, மாலை 5:00 மணி வரை, www.tncu.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இணைய தளத்தில் அல்லாத விண்ணப்பங்களை முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.இந்த பயிற்சி தமிழில் கற்றுக் கொடுக்கப்படும். 100 ரூபாய் விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வான பயிற்சியாளர் பயிற்சி கட்டணமாக, 18,750 ரூபாய் பில் டெஸ்க் பேமென்ட் கேட்வே வாயிலாக செலுத்த வேண்டும்.மேலும், விபரங்களுக்கு, அண்ணா கூட்டுறவு மேலாண் பயிற்சி நிலையம், எண்:5ஏ வந்தவாசி சாலை, காஞ்சிபுரம், என்கிற முகவரிலோ அல்லது 044- 27237699 என்ற தொலைபேசியில் தொடர்புக் கொள்ளலாம் என, மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.