உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஏரியில் ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் இளசுகள்

ஏரியில் ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் இளசுகள்

உத்திரமேரூர்,:காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரிய ஏரிகளில் ஒன்றாக உள்ளதுஇ உத்திரமேரூர் ஏரி. இங்கு, கடந்த 10 நாட்களாக பெய்த கன மழையால், ஏரி முழுதுமாக நிரம்பியது.தொடர்ந்து, ஏரியின் பாதுகாப்பு கருதி, கலங்கல் மற்றும் நரிமடை வாயிலாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது, கலங்கல் வழியாக வரும் நீரானது, அதிக வேகத்துடன் வந்து கொண்டிருக்கிறது.இந்நிலையில், விடுமுறை நாட்களில், உத்திரமேரூரை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள், ஏரியை நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.தொடர்ந்து, கலங்கல் பகுதியில் நின்றுகொண்டு செல்பி எடுப்பதுடன், ஆபத்தை உணராமல் சிறுவர்களை குளிக்க வைத்து, பெற்றோர் வேடிக்கை பார்த்து ரசித்து வருகின்றனர்.இதனால், சிறுவர்கள் 20 அடி ஆழமுள்ள ஏரியில் தவறி விழுந்து, விபத்தில் சிக்கும் சூழல் அதிகமாக உள்ளது. இதை தடுக்க, அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட கோரிக்கை எழுந்துள்ளது.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:உத்திரமேரூர் ஏரியை பொதுமக்கள் பார்வையிடுவதை தடுக்க, நீர்வளத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், அப்பகுதி இளைஞர்கள் கலங்கல் பகுதியில் நின்றுகொண்டு செல்பி எடுப்பது தொடர்ந்து வருகிறது.எனவே, ஏரி பகுதியில் பொதுமக்கள் செல்லாதவாறு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை