உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / டி.ஆர்.ஒ.,விடம் தகராறு செய்த வாலிபர் கைது

டி.ஆர்.ஒ.,விடம் தகராறு செய்த வாலிபர் கைது

உத்திரமேரூர்:உத்திரமேரூர் தாலுகா, காவாம்பயிர், செம்புலம், இருமரம், கம்மாளம்பூண்டி ஆகிய கிராமங்களில், ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுக்கு மேல் குடியிருப்பவர்களுக்கு, பட்டா வழங்குவதற்காக உத்திரமேரூர் வருவாய் துறையினர் கள விசாரணை மேற்கொண்டனர்.அப்போது, காவாம்பயிர் கிராமத்தில் வீடு கட்டி குடியிருப்பவர்களின் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆதாரங்களை, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் சரி பார்த்து கொண்டிருந்தார்.அந்த நேரத்தில், அதே பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ், 33, என்பவர், மாவட்ட வருவாய் அலுவலரிடம் தகராறில் ஈடுபட்டார். பின், வருவாய் துறையினர், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறி, ஜெயராஜ் மீது மாகரல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி, மாகரல் போலீசார் ஜெயராஜை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி