உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கஞ்சா விற்ற வாலிபர் கைது 1.5 கிலோ பறிமுதல்

கஞ்சா விற்ற வாலிபர் கைது 1.5 கிலோ பறிமுதல்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஒரகடம் அருகே கண்டிகை பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக, காஞ்சிபுரம் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்படி, ஒரகடம் கண்டிகை சந்திப்பில் உள்ள வட மாநில இளைஞர்கள் தங்கியுள்ள அறையில், போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அதில், 1.5 கிலோ கஞ்சா விற்னைக்காக வைத்திருந்து தொரிந்தது.இதையடுத்து, மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த, கோபி ருடாஸ், 25, கைது செய்து விசாரித்ததில், சொந்த ஊரான மேற்குவங்க மாநிலம், பங்குராவில் இருந்து, ரயில் மூலம் கஞ்சாவை கடத்திவந்து, 50 கிராம் பாக்கிட் 500 ரூபாய் என, ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம், சுங்குவார்சத்திரம் பகுதிகளில் உள்ள வட மாநில தொழிலாளர்களை குறிவைத்து விற்பனை செய்து வந்தது தெரிந்து.இதையடுத்து, 25,000 மதிப்புள்ள 1.5 கஞ்சாவை பறிமுதல் செய்து, மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த கோபி ருடாஸ்சை கைது செய்து சிறையில் அடைத்தனர்.****


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி