மேலும் செய்திகள்
கஞ்சாவுடன் 3 பேர் கைது
16-Oct-2025
காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அடுத்த, நாய்க்கன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் முகமதுரசூல், 23; இவர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தொடர்பாக, வாலாஜாபாத் காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு வேலுார் சிறையில் உள்ள, முகமதுரசூலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டருக்கு, எஸ்.பி.,சண்முகம் பரிந்துரை செய்தார். அதன்படி, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவின்படி, முகமது ரசூல் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை, சிறையில் உள்ள அவரிடம் போலீசார் வழங்கினர்.
16-Oct-2025