உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / செய்யாற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு

செய்யாற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு

உத்திரமேரூர்:திருவண்ணாமலை மாவட்டம், மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் மகன் மேகநாதன், 20; தனியார் நிறுவன ஊழியர்.இவர், தன் நண்பர்களான திருமுருகன், 16, பாலாஜி, 22, ஆகியோருடன், செய்யாற்று அனுமந்தண்டலம் தடுப்பணை பகுதியில், குளித்து கொண்டிருந்தார்.அப்போது, மேகநாதன் குளித்துவிட்டு மேலே ஏறும்போது, கால் தவறி ஆற்றில் விழுந்து அடித்து செல்லப்பட்டார். உத்திரமேரூர் தீயணைப்பு போலீசார் உடலை மீட்டனர்.பின், காஞ்சிபுரம் அரசு மருத்துவனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. பெருநகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !