மேலும் செய்திகள்
போலீஸ் செய்தி..
08-Nov-2024
ஸ்ரீபெரும்புதுார்:சேலம் மாவட்டம், கங்காவலி, கிழக்கு ராஜபாளையம், விவேகானந்தபுரத்தைச் சேர்ந்தவர் மணி, 26; ஸ்ரீபெரும்புதுார், பட்டுநுால் சத்திரம் பகுதியில் வாடகைக்கு தங்கி, இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு, ‛ஹீரோ கிளாமர்' பைக்கில் ஹெல்மெட் அணியாமல், இருங்காட்டுக்கோட்டையில் இருந்து, ஸ்ரீபெரும்புதுார் சென்றார். சிப்காட் சாலையில், இருங்காட்டுகோட்டை ரவுண்டான அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக நிலைத்தடுமாறி விழுந்தார். அப்போது, பின்னால் வந்த லாரி சக்கரத்தில் சிக்கி, மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
08-Nov-2024