உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / யூத் வாலிபால் 24 பேர் தேர்வு

யூத் வாலிபால் 24 பேர் தேர்வு

சென்னை : தமிழ்நாடு மாநில யூத் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி, வேலுார் வி.ஐ.டி.,யில் வரும் நவ., 2 முதல் 5ம் தேதி வரை நடக்கிறது. இப்போட்டியில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாநிலத்தை பல்வேறு பகுதிகளில் இருந்து, மாவட்ட அணிகள் பங்கேற்கின்றன.போட்டியில் பங்கேற்க உள்ள சென்னை மாவட்ட அணிக்கான வீரர், வீராங்கனையர் தேர்வு, நேற்று முன்தினம், எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் நடந்தது. காலையில் நடந்த ஆடவருக்கான தேர்வில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதில் சூர்யா, உதிஷ்குமார், ரகுராம், சபரீஷ், கோபிநாத், புவனேஷ்வரன், ராஜா, ஜோயல், ஜெரீ டேனியல் உள்ளிட்ட 12 வீரர்கள் தேர்வாகினர்.அதேபோல், மாலை நடந்த வீராங்கனையருக்கான தேர்வில் ஸ்வாதிகா, பிரீதிகா, காவியா, பிரிஷா கோபிகா, விஷ்ணு ஸ்ரீ உள்ளிட்ட 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி