உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / குழித்துறையில் மாவேலி ஊர்வலம் கோலாகலம்

குழித்துறையில் மாவேலி ஊர்வலம் கோலாகலம்

மார்த்தாண்டம் : திரு ஓணத்தை வரவேற்கும் விதமாக குழித்துறையில் மாவேலி ஊர்வலம் நடந்தது. மாவேலி வேடமணிந்தவர் வீடுவீடாக சென்று பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.கேரள மக்களின் வசந்தகால விழாவான திரு ஓணம் நேற்று நாடுமுழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. கேரள மாநிலம் கடந்த 10 நாட்களாக விழாக்கோலம் பூண்டது. கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லையோர பகுதிகளான கொல்லங்கோடு, களியக்காவிளை, பளுகல், மேல்புறம், குழித்துறை, மார்த்தாண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் ஓணவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.கோயில்கள், வீடுகள், கல்வி நிலையங்கள், நற்பணி மன்றங்களில் கண்களுக்கு குளிர்ச்சி தரும் விதத்தில் பூக்களால் கோலமிடப்பட்டிருந்தது. சில வீடுகளில் ரங்கோலி கோலம் இடப்பட்டிருந்தது. குழித்துறை பிரதேழ்ஸ் கிளப் சார்பில் போஸ்ட் ஆபிஸ் ஜங்ஷனில் சங்கு வடிவில் பூக்களால் அத்தப்பூ கோலமிடப்பட்டிருந்தது. மாவேலி வேடமணிந்தவர் குத்துவிளக்கேற்றி அத்தப்பூவை பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைத்தார்.செண்டைமேளம் முழங்க மாவேலி ஊர்வலம் நடந்தது. மாவேலி வீடுவீடா சென்று பொதுமக்களை சந்தித்து திரு ஓண வாழ்த்து தெரிவித்தார். மேலும் இரண்டு பேர் புலி வேடமும், இரண்டு பேர் காட்டாளன் வேடமும் அணிந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். குழித்துறை சப்பாத் ரோடு, இடத்தெரு, பெருந்தெரு, கிராமம் பகுதிகளில் மாவேலி ஊர்வலம் நடந்தது.திரு ஓண விழாவை முன்னிட்டு வெட்டுவெந்நி சாஸ்தா கோயில், குழித்துறை மகாதேவர் கோயில், கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பெண்கள் நேரியல் உடுத்து கோயிலுக்கு செல்வதை காணமுடிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை