மேலும் செய்திகள்
இரு மாணவியர் மாயம்; தனிப்படை தீவிரம்
04-Mar-2025
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் காணாமல் போன இரண்டு பள்ளி மாணவிகள் சென்னையில் மீட்கப்பட்டனர். நகையை விற்று சென்னையை சுற்றி பார்க்க சென்றதாக இருவரும் போலீசில் தெரிவித்துள்ளனர்.திருவட்டார் அருகே செறுமன் கோணத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி இருவரும் பிப்.7ல் பள்ளிக்கு சென்றவர்கள் திரும்பவில்லை. பெற்றோர் திருவட்டார் போலீசில் புகார் செய்தனர். இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்நிலையில் அவர்கள் சென்னையில் இருப்பது தெரிந்தது. மாணவிகள் இருவரையும் போலீசார் மீட்டு அழைத்து வந்தனர். இரண்டு மாணவிகளில் ஒருவர் ஏற்கனவே சென்னையில் படித்தவர் என்பதால் அவருடன் சேர்ந்து சென்னையை சுற்றி பார்க்க வந்ததாக இருவரும் தெரிவித்தனர். இதற்காக தங்கள் வசம் இருந்த நகையை கோட்டாரில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
04-Mar-2025