உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சிலை அகற்றம்

கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சிலை அகற்றம்

நாகர்கோவில் : நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மர்மநபர் வைத்து சென்ற விநாயகர் சிலையை போலீசார் அப்புறப்படுத்தினர்.நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தின் முன் பகுதியில் ஆவின் பாலகம் உள்ளது. அதன் அருகே புதிய விநாயகர் சிலை இருந்தது. இது பற்றி கலெக்டர் அலுவலக ஊழியர்கள் நேசமணி நகர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விசாரணையில் ஹிந்து அமைப்பு நிர்வாகி ஒருவர் விநாயகர் சிலையை கொண்டு வந்ததாகவும், அதை அங்கு வைத்துவிட்டு மறந்து சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார். அந்த சிலையை வாங்க தான் வருவதாக போலீசாரிடம் அவர் கூறினார். எனினும் கிராம நிர்வாக அதிகாரி முன்னிலையில் அந்த சிலையை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை