மேலும் செய்திகள்
பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்
01-Sep-2024
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி அருகே சீதப்பாலை சேர்ந்தவர் அலெக்சாண்டர், 84; முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி ரோஸ்லின், 78. ஓய்வு பெற்ற ஆசிரியை. அலெக்சாண்டரும், ரோஸிலினும் சீதபாலில் உள்ள மகள் ஷீபா வீட்டில் வசித்து வந்தனர். அலெக்சாண்டருக்கும், ரோஸ்லினுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அலெக்சாண்டர், மனைவியை சுத்தியலால் தாக்கியும், கழுத்தை கத்தியால் அறுத்தும் கொலை செய்தார். அலெக்சாண்டரை ஆரல்வாய்மொழி போலீசார் கைது செய்தனர்.
01-Sep-2024