உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / அம்பேத்கரை வைத்து அரசியல் வேண்டாம்

அம்பேத்கரை வைத்து அரசியல் வேண்டாம்

நாகர்கோவில்:''அம்பேத்கர் விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்'' என பா.ஜ., முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.நாகர்கோவிலில் அவர் கூறியதாவது:கோவையில் பாட்ஷா இறுதி ஊர்வலத்துக்கு ஆதரவு கொடுத்ததற்காக முதல்வர் தலைகுனிய வேண்டும். அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ., தலைவர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகளை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. அம்பேத்கர் விவகாரத்தை வைத்து அரசியல் விளையாட்டு செய்ய வேண்டாம். நெல்லையில் நீதிமன்றத்துக்கு வெளியே கொலை நடந்ததால் அதற்கும் சட்டத்துறைக்கும் சம்பந்தமில்லை என்கிறார் சட்டத்துறை அமைச்சர். அவர் அந்த பொறுப்பில் இருக்க தகுதியற்றவர்.2026 சட்டசபை தேர்தலில் இரு முனை போட்டி தான் இருக்கும் என்று முதல்வர் கூறியுள்ளார். முனை மழுங்கி விட்டால் எத்தனை பேர் வந்தாலும் வெற்றி பெற முடியாது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை