கன்னியாகுமரியில் படகு சேவை நேரம் அதிகரிப்பு
நாகர்கோவில்: சபரிமலை நடை திறந்து மகர விளக்கு சீசன் தொடங்கியதும் கன்னியாகுமரியில் கூட்டம் களை கட்டும். இதை கருத்தில் கொண்டு பூம்புகார் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்து நேரத்தை ஒரு மணி நேரம் அதிகரித்துள்ளது. இதன்படி நவ., 17 முதல் காலை 7:00 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.