உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / பயணியை தாக்கிய அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட்

பயணியை தாக்கிய அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட்

மார்த்தாண்டம்:குமரி மாவட்டம், குலசேகரத்தில் இருந்து மார்த்தாண்டத்திற்கு இரு நாட்களுக்கு முன் அரசு பஸ்சில், ஆற்றுாரில் ஒரு இளைஞர் ஏறினார். அவரிடம் டிக்கெட் எடுக்க கூறிய போது, 'பெண்களுக்கு மட்டும் இலவசம்... எங்களுக்கு கட்டணமா?' என, கேட்டார். இதனால் கண்டக்டர் காந்திக்கும், அந்த இளைஞருக்கும் தகராறு ஏற்பட்டது. டிரைவர் பத்மகுமார், கண்டக்டருடன் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கினார். இதற்கிடையே, டிரைவர், கண்டக்டர் சேர்ந்து இளைஞரை தாக்கும் வீடியோ, சமூகவலை தளங்களில் வேகமாக பரவியது. இது பற்றி போலீசார் விசாரித்த போது, அந்த நபர் உண்ணாமலை கடை அருகே, முடியாம்பாறை பகுதியை சேர்ந்தவர் என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிந்தது. இதையடுத்து, டிரைவர் மற்றும் கண்டக்டரை சஸ்பெண்ட் செய்து, அரசு போக்குவரத்து கழக நாகர்கோவில் கிளை அதிகாரிகள் நேற்று உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி