அ.தி.மு.க., வெற்றி பெற்றால் மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு
நாகர்கோவில்:''2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்று அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி முதல்வர் ஆனால் மட்டுமே மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும்,'' என, கன்னியாகுமரியில் அக்கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளர் நடிகை கவுதமி தெரிவித்தார்.அவர் கூறியதாவது: கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழக மக்கள் சட்டம் ஒழுங்கு பிரச்னை, விலைவாசி உயர்வு, பாதுகாப்பின்மை போன்றவைகளால் சிரமப்படுகின்றனர். பழனிசாமி வெற்றி பெற்று முதல்வர் ஆனால் மட்டுமே இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்து வெற்றிடைந்தவர்கள் மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா. இவர்கள் அதிசய பிறவிகள். நடிகர் விஜயின் எதிர்கால நடவடிக்கையை பொறுத்துதான் அவர் அரசியலில் வெற்றி பெறுவாரா என்பது தெரியும்.அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமியின் எழுச்சி பயணம் மக்களின் பிரச்னைகளை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றார்.