மேலும் செய்திகள்
போலி பணி நியமன ஆணை வழங்கி ரூ. 15 லட்சம் மோசடி
24-Sep-2025 | 1
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லுாரி மாணவி இறப்பு
20-Sep-2025
மர்ம காய்ச்சல் பாதித்து மருத்துவ மாணவி பலி
19-Sep-2025
வில்லுக்குறி : மாம்பழத்துறையாறு அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அணை தண்ணீரில் குளித்து மகிழ்கின்றனர். நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்லுக்குறி பாலத்தில் இருந்து சுமார் 3 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது மாம்பழத்துறையாறு அணை. இந்த அணையானது குமரி மாவட்ட மக்கள் இடையே பெரிதும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவாக அணை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. விடுமுறை நாட்களில் கூடுதலாக சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். குமரி மாவட்டம் மட்டுமன்றி திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குமரியின் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அணை பகுதியில் வீசும் இயற்கை காற்று சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. மலைப்பகுதிகள் மற்றும் பச்சைச்பசேல் என உள்ள செடி, கொடிகள், மரங்கள், மூலிகை செடிகள் கண்களை குளுமைப்படுத்துகின்றன. சிறுவர்கள் விளையாடி மகிழ சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இது அணைக்கு வரும் சிறுவர்களை உற்சாகப்படுத்துவதாக உள்ளது.
சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட உஞ்சலில் பெரியவர்களும் ஆனந்தமாக ஆடி மகிழ்கின்றனர். தற்போது புதுமண தம்பதிகள் திருமணத்திற்கு பின் வீடியோ எடுக்க அணை பகுதிக்கு வருவதும் அதிகரித்துள்ளது. தற்போது அணையின் உள்ளே மேல் பகுதியில் இயற்கையாக உள்ள முளம்சல்லி ஓடை நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. இது அணையின் மேல்பகுதியில் இருந்து பார்த்தால் சில நேரங்களில் தெரியும். அணை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் முளம்சல்லி ஓடை நீர்வீழ்ச்சியை பார்க்க வழி கேட்கின்றனர். கல்லூரி மாணவர்கள் கரடு முரடான, முழுமையான பாதை வசதி இல்லாத பகுதிகள் வழியாக நீர்வீழ்ச்சி பகுதிக்கு சென்று குளித்து வருகின்றனர்.
தங்களுடைய காமரா செல்போனில் படம் பிடித்து நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் காண்பித்து அவர்களையும் பார்க்க தூண்டுகின்றனர். அண்மையில் இந்த நீர்வீழ்ச்சியை சுற்றுலா தலமாக மாற்றுவது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பெரியவர்கள், சிறியவர்கள், பெண்கள் போன்றவர்கள் தற்போது உள்ள சூழ்நிலையில் செல்ல வேண்டுமானால் அது மிகவும் சிரமமான ஒன்றாகவே உள்ளது. இவர்களில் குளிக்க நினைப்பவர்கள் தற்போது அணையின் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் சென்று குளித்து மகிழ்கின்றனர். முளம்சல்லி ஓடை நீர்வீழ்ச்சியை சுற்றுலா பயணிகள் அருகில் சென்று பார்த்து மகிழும் வகையில் பாதை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அதுபோல் மாம்பழத்துறையாறு அணைக்கு செல்ல பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
24-Sep-2025 | 1
20-Sep-2025
19-Sep-2025