உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / மரத்தடியில் அமர்ந்தவர் தலையில் பலா விழுந்து இறப்பு

மரத்தடியில் அமர்ந்தவர் தலையில் பலா விழுந்து இறப்பு

நாகர்கோவில்; கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே, வேலை செய்த களைப்பில், பலா மரத்தின் அடியில் ஓய்வெடுத்த பீஹார் தொழிலாளி தலையில் பலாப்பழம் விழுந்து, பரிதாபமாக இறந்தார்.பீஹார் மாநிலம், கட்டிக்கார் பகுதியை சேர்ந்தவர் தஜிபூர், 23. அவரது தம்பி மஜிபூர், 21. இருவரும், மார்த்தாண்டம் அருகே சொடக்குவிளை பகுதியில், தனியார் கட்டுமான நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வந்தனர்.சம்பவத்தன்று, ஓய்வெடுப்பதற்காக அங்குள்ள பலாமரத்தின் அடியில் அமர்ந்திருந்தனர். அப்போது, மரத்தில் இருந்து பெரிய பலாப்பழம், தஜிபூர் தலை மீது விழுந்தது.பலத்த காயமடைந்த அவர், நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். மஜிபூர் புகாரில், மார்த்தாண்டம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை