உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / தாணுமாலைய சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா கொடியேற்றம்

தாணுமாலைய சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா கொடியேற்றம்

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.சிவன், பிரம்மா, விஷ்ணு என மும்மூர்த்திகளும் மூலவராக அருள் பாலிக்கும் இக்கோயிலில் நடக்கும் முக்கிய திருவிழாவான இக் கொடியேற்றத்தில் பக்தர்கள் பங்கேற்றனர்.இன்று முதல் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி பவனி வருவார். ஜன., 6 மூன்றாம்நாள் விழாவில் இரவு 10:30 மணிக்கு மக்கள்மார் சந்திப்பு நடக்கிறது.ஜன., 12ல் காலை 7:45 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. அன்று நள்ளிரவு 12:00 மணிக்கு சப்தாபரணம் நடக்கும்.நிறைவு நாளான ஜன., 13 அதிகாலை 4:00 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், மாலை 5:00 மணிக்கு நடராஜமூர்த்தி வீதி உலாவும், இரவு 9:00 மணிக்கு ஆராட்டும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ