உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / நாகர்கோவில் மாநகர குப்பை கிடங்கில் தீ மக்கள் வீடுகளை காலி செய்யும் அவலம்

நாகர்கோவில் மாநகர குப்பை கிடங்கில் தீ மக்கள் வீடுகளை காலி செய்யும் அவலம்

நாகர்கோவில்:நாகர்கோவில் வலம்புரிவிளை மாநகராட்சி குப்பை கிடங்கு நேற்று இரண்டாவது நாளாக தீப்பற்றி எரிந்தது. புகை மூட்டத்தால் அப்பகுதி மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வருகின்றனர்.குமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு வலம்புரிவிளையில் உள்ளது. இது, நகரை ஒட்டிய பகுதியாக உள்ளது. இதை இங்கிருந்து மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்தும், மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. அடிக்கடி கிடங்கில் ஏற்படும் தீ விபத்தால், நகர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் காலை திடீரென இங்கு தீ பற்றியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், தீ வேகமாக பரவியது. தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து முயற்சித்தும் கட்டுக்குள் வரவில்லை. அப்பகுதி முழுதும் புகை மூட்டமானது. இதனால் அப்பகுதியில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்கள் வீடுகளிலும், லாட்ஜுகளிலும் தங்கி உள்ளனர். அப்பகுதியில் இரண்டு பள்ளிகளுக்கு நேற்று இரண்டாம் நாளாக விடுமுறை அளிக்கப்பட்டது. மண் அள்ளும் இயந்திரம் வாயிலாக எரிந்து கொண்டிருக்கும் குப்பை கிளறப்பட்டு, தீ அணைக்கப்படுவதால் கடுமையான புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது.கிடங்கு சுற்றிய பகுதிகளை கலெக்டர் அழகு மீனா, மேயர் மகேஷ் பார்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதன் காரணமாக நாகர்கோவில் பீச் ரோடு சந்திப்பிலிருந்து இருளப்பபுரம் செல்லும் சாலை முழுமையாக மூடப்பட்டுள்ளது. புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை